நாங்களும் மனுஷங்க தான்: எங்களையும் கொஞ்சம் பாராட்டுங்க: தூய்மை பணியாளர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அந்த வைரஸை எதிர்த்துப் இரவு பகலாக போராடிவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
அதேபோல் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று இரவு பகலாக காவல் துறையினரும் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கும் பாராட்டு குவிகின்றன. ஆனால் எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் விடுமுறை எடுக்காமல் தன்னலம் கருதாமல் இரவு பகலாக உழைத்து வருபவர்களில் தூய்மை பணியாளர்களும் அடங்குவர். அவர்களை இந்த சமூகம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு தேவையான மாஸ்குகள் மற்றும் கையுறைகள் அரசு வழங்கி வரும் நிலையில் அதைவிட ரிஸ்க்கான வேலை பார்த்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள் மற்றும் மாஸ்குகள் சரியாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் நோய்கள் வரும், ஊரில் உள்ள எல்லோருடைய குப்பையையும் சுத்தப்படுத்தி நோய்களை வாங்கிக் கொள்ளும் எங்களையும் அரசு கொஞ்சம் கவனிக்க வேண்டுமென்று தூய்மைப் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதேபோல் மருத்துவத்துறையில் உள்ளவர்கள், காவலர்களை பாராட்டுவது போல் தூய்மைப்பணியாளர்களையும் எங்களையும் பாராட்டினால் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என பாராட்டுக்களை வாய்விட்டு கேட்கும் இந்த தூய்மைப்பணியாளர்களை மனதாக பாராட்டுவோம். ‘தூய்மை இந்தியா’வை உருவாக்குவதில் நூறு சதவீத பங்களிப்பை தந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட்.
Well said Nanba ❤️??
— IndiaGlitz - Tamil (@igtamil) March 26, 2020
All they need is Love & Support ??#Loveallequally pic.twitter.com/vjeLQ9LZlg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout