நாசர் மகன் அறிமுகமாகும் முதல் படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

  • IndiaGlitz, [Thursday,January 28 2016]

பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் மகன் லூபுதின் பாட்ஷா ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' மற்றும் 'இது என்ன மாயம்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் நாயகியாக 'சரபம்' படத்தில் நடித்த சலோனி லூத்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சிங்கப்பூரில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த சலோனி திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார்.

இதுகுறித்து சலோனி விளக்கமளித்தபோது,' இந்த படத்தின் இயக்குனர் தனபால் பத்மநாபன், என்னிடம் போனில்தான் கதை கூறினார். அப்போது இந்த கதை எனக்கு பிடித்திருந்ததால் நானும் நடிக்க ஒப்புக்கொண்டு சிங்கப்பூர் சென்றேன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் இந்த கேரக்டர் எனக்கு சரியாக வராது என தோன்றியது. இதனால் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். இருப்பினும் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட அனைவரின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இது ஒரு நல்ல டீம்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து நாயகி விலகியதால் ஏற்பட்ட திடீர் சிக்கலை அடுத்து வேறு நாயகியை தேடும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

More News

'குட்டித்தல'க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரசிகர்களாக இருப்பவர்கள் இதுவரை தங்களுக்கு பிடித்தமான நடிகர்...

'மருது' படக்குழுவினர்களின் ஆன்மீக தரிசனம்

விஷால் நடித்த 'கதகளி' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்...

திரை முன்னோட்டம். மாதவனின் 'இறுதிச்சுற்று

கடந்த 2000ஆம் ஆண்டு சாக்லேட் பாய் ஆக மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான மாதவன்...

வெங்கட்பிரபுவின் 'சென்னை 28' தொடங்குவது எப்போது?

கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை 600028. ஜெய், சிவா, நிதின் சத்யா...

இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை விருந்து தரும் ராய்லட்சுமி

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ராய்லட்சுமி நடித்த 'இரும்புக்குதிரை மற்றும்...