'மாஸ்டர்' இந்தி ரீமேக்: சம்மதம் தெரிவிப்பாரா சல்மான்கான்?
- IndiaGlitz, [Thursday,June 10 2021]
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஓராண்டுக்கு மேலாக திரையரங்குகள் பக்கமே ரசிகர்கள் வர பயந்து கொண்டிருந்த நிலையில் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைத்த ஒரே திரைப்படம் ’மாஸ்டர்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த படம் ஏற்கனவே தெலுங்கு, இந்தி உள்பட ஒரு சில மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் தற்போது இந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது ’மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக் குறித்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது
இந்த படத்தில் விஜய்யின் ஜேடி என்ற கேரக்டரில் நடிப்பதற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் அனேகமாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் அவரது கேரக்டரில் அவரே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.