பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி சம்பளமா? திரையுலகினர் ஆச்சரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் வரும் அக்டோபரில் தொடங்க இருக்கிறது என்பதும் தெலுங்கில் அதேபோல் நான்காவது சீசன் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹிந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தற்போது 14 வது சீசன் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹிந்தியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானுக்கு ஒவ்வொரு சீசனிலும் சம்பளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. 4வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சல்மான்கான், 7,8 சீசன்களில் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார். அதனை அடுத்து 9வது சீசன் முதல் ஒவ்வொரு சீசனுக்கும் சம்பளத்தை உயர்த்து கொண்டே வந்த சல்மான்கான், தற்போது 14வது சீசனில் ஒரு நாளைக்கு ரூ20 கோடி சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை மொத்தம் அவர் தொகுத்து வழங்க 250 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சம்பளத்தை பார்த்து திரையுலகினரை ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
அதேபோல் கமல்ஹாசனுக்கும் கடந்த மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சீசனில் அதைவிட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments