'மாஸ்டர்' கதை சரியில்லை: சல்மான்கான் அறிவிப்பால் படக்குழுவினர் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் சேர்த்து 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாலிவுட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தில் விஜய் நடித்த கேரக்டரில் சல்மான் கான் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ’மாஸ்டர்’ கதையை இந்திக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்திக்கு ஏற்றவாறு ’மாஸ்டர்’ கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சல்மான்கானிடம் கூறியபோது அவர் அந்த கதையை கேட்டு தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறியதோடு, இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ ஹிந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகி உள்ளதால் இந்த படம் திட்டமிட்டபடி இந்தியில் ரீமேக் செய்யப்படுமா? அல்லது கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

More News

நானும் ரவுடிதான்… வடிவேலு பாணியில் ஜெயிலுக்கு போகனுமா? அட்டகாசமான ஆஃபர்!

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான “தலைநகரம்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு

கல்விக்கு ஏது வயது? 86 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய முன்னாள் முதல்வர்!

ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் முதல்வராக பதவிவகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது தனது 86 ஆவது வயதில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத்தைத் தேர்வை வெற்றிக்கரமாக எழுதி முடித்துள்ளார்.

தமிழில் டப் செய்வதை நிறுத்திய 'மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த படம்: காரணம் என்ன?

கிட்டத்தட்ட அனைத்து ஹாலிவுட் படங்களும் இந்திய மொழிகளில் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் மொழியில் வெளியாகாத ஹாலிவுட் படங்களே இல்லை என்று கூறலாம்.

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கே.ஜி.எஃப் 2' தற்போது

அரசு மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர்… குவியும் பாராட்டு!

கேரளாவில் பணியாற்றிவரும் சப்-கலெக்டர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்