close
Choose your channels

சல்மான்கான் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்.. படப்பிடிப்பு எப்போது?

Tuesday, August 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுத்த படத்தை அஜித் படம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் தற்போது ’டைகர் 3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற போட்டி பாலிவுட்டில் இருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு தற்போது தமிழ் பட இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு கிடைத்துள்ளது.

அஜீத் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை இயக்கி முடித்து உடன் அவர் சல்மான் கான் படத்தை இயக்க இருக்கிறார் என்றும் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் பான் - இந்தியா படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment