close
Choose your channels

அட்லியின் 6வது படம்.. ஒரே படத்தில் 3 பிரபலங்களா?

Monday, September 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லியின் 6வது திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

'ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் "தெறி", "மெர்சல்" மற்றும் "பிகில்" ஆகிய மூன்று விஜய் படங்களை எடுத்து சூப்பர்ஹிட் ஆக்கினார் என்பது தெரிந்தது. அதன் பின்னர் ஷாருக்கான் நடித்த "ஜவான்" திரைப்படத்தை இயக்கிய நிலையில், அவரது 6வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, அட்லியின் 6வது படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையும் இந்த படம் மிகப் பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இன்னொரு பிரபலமாக அனிருத் இணைவார் என்றும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், சல்மான் கான், கமல்ஹாசன், அனிருத், மற்றும் அட்லீ ஆகியோர் இணையும் இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment