அட்லியின் 6வது படம்.. ஒரே படத்தில் 3 பிரபலங்களா?

  • IndiaGlitz, [Monday,September 30 2024]

இயக்குனர் அட்லியின் 6வது திரைப்படத்தில் மூன்று பிரபலங்கள் இணைய இருப்பதாகவும், கிட்டத்தட்ட இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

'ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று விஜய் படங்களை எடுத்து சூப்பர்ஹிட் ஆக்கினார் என்பது தெரிந்தது. அதன் பின்னர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கிய நிலையில், அவரது 6வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி, அட்லியின் 6வது படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கிட்டத்தட்ட கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையும் இந்த படம் மிகப் பெரிய பான் இந்திய படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இன்னொரு பிரபலமாக அனிருத் இணைவார் என்றும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், சல்மான் கான், கமல்ஹாசன், அனிருத், மற்றும் அட்லீ ஆகியோர் இணையும் இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'டாப் குக்கு டூப் குக்கு' டைட்டில் வின்னர் யார்? 2ஆம் இடம், 3ஆம் இடம் யாருக்கு?

சன் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி இன்று முடிவடைந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்கள்

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. உறுதி செய்த இயக்குனர்..!

அனுஷ்கா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நல்லவேளை கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை.. 2 படங்களை மிஸ் செய்த தகவல் கூறிய அரவிந்த்சாமி..!

சூப்பர் ஸ்டார்ஜ் ரஜினிகாந்த் அவர்களுடன் 'தளபதி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அரவிந்த்சாமி, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்,

சிங்கப்பூர் குடிமகன், பைலட்டை திருமணம் செய்ய போகும் 'வாணி ராணி' சீரியல் நடிகை..!

ராதிகா நடித்த 'வாணி ராணி' உள்பட சில சீரியல்களில் நடித்த நடிகை, சிங்கப்பூர் குடிமகன் பைலட்டை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதலமைச்சர் ஆனார் உதயநிதி.. கமல்ஹாசன் உள்பட திரையுலகினர் வாழ்த்து..!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவருக்கு கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.