ரசிகரின் மொபைல் போனை உடைத்த சல்மான்கான்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் சில பிரபலங்கள் கோபப்பட்டு ரசிகர்களின் செல்போன்களை தட்டிவிட்டு உடைத்து விடுவதும் உண்டு
சமீபத்தில் நடிகர் சிவகுமார் அவர்கள் இது குறித்த பிரச்சினைகள் சிக்கி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தான் நடித்து வரும் படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கோவா சென்றார். கோவா விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் சல்மான்கானை செல்பி புகைப்படம் எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சல்மான்கான் அந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு வேகமாகச் சென்றார். அந்த செல்போன் சுக்குநூறாக உடைந்துவிட்டதாக தெரிகிறது.
செல்போனை இழந்த ரசிகர் கோவா விமான நிலையத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இருப்பினும் இதுகுறித்த புகார் எதுவும் பதிவு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SalmanKhan slaps a fan at the airport.. pic.twitter.com/wEdur16tf1
— BOX OFFICE INDIA (@Box_officeIndia) January 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com