ஜாமீன் எப்போது? 2வது இரவையும் ஜெயிலில் கழிக்கும் சல்மான்கான்
- IndiaGlitz, [Friday,April 06 2018]
அரிய வகை மான்களை வேட்டையாடியதாக சல்மான்கான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்றால் உடனடி அப்பீல் மற்றும் ஜாமீன் கிடைக்காது என்பதால் சல்மான்கான் நேற்று மாலையே சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சல்மான்கான் தரப்பினர் இன்று மேல்முறையீடு மற்றும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் ஜோத்பூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உடனே சல்மான்கானுக்கு ஜாமீன் தர மறுத்துவிட்டார். இந்த மனுவை அவர் நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளதால் இன்று இரவும் சல்மான்கான் சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு சிறையில் சல்மான்கான் தூக்கமின்றி தவித்ததாக கூறப்படுகிறது. சல்மான்கானை நம்பி பாலிவுட் படவுலகம் நூற்றுக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளதால் அவரை விரைவில் ஜாமீனில் எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.