பாலிவுட் மெகா ஸ்டார்ஸ் சல்மான், ஷாருக்கை புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பல வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்று விட்டார். ஆனாலும் கிரிக்கெட் போட்டிகளின்போது தான் இந்தியாவிற்கு பயணம் செய்தது பற்றியும் அப்போது தன்னை அக்கறையோடு கவனித்துக் கொண்ட பாலிவுட் மெகா ஸ்டார் நடிகர்கள் சல்மான்கான், ஷாருக்கான் பற்றியும் அவர் நெகிழ்ச்சிப் பொங்க தற்போது கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்டிகளைத் தவிர இந்தியாவுடன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வந்தது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்தனர். இப்படியான பயணத்தில் பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் என்னை அவர்களின் தம்பியைப் போலவே கவனித்துக் கொண்டனர்.
அதுவும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என யார் இருந்தாலும் என்னை அக்கறையோடு பார்த்துக் கொண்ட விதம் இப்போது நினைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இந்த நிலைமை மீண்டும் கிடைக்குமா? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் உறவு மீண்டும் மேம்பட வேண்டும். அப்படி நடக்கும்போது இந்தியாவிற்கு வரும் முதல் ஆளாக நான் இருப்பேன் எனத் தெரிவித்து உள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கூறிய இந்தத் தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com