இளையதளபதியின் 'போக்கிரி 2': பிரபல தயாரிப்பாளர் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

இளையதளபதி விஜய், அசின் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் 'போக்கிரி'. விஜய் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று. இந்த படம் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படம் ஒன்றின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிப்பில் சல்மான்கான் நடிப்பில் 'வாண்டட்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது., இந்தியிலும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது
இந்நிலையில் நேற்று கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போனிகபூர், விரைவில் 'வாண்டட் 2' படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சல்மான்கான் இல்லாமல் தயாரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் சல்மான்கானின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியில் 'வாண்டட் 2' உருவாகும் பட்சத்தில் தமிழிலும் விஜய் நடிப்பில் 'போக்கிரி 2' படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'விவேகம்' டீசர் சாதனை குறித்து Forbes பத்திரிகையில் செய்தி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'பாகுபலி 2' என்ற தென்னிந்திய திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் சாதனை மீண்டும் உலகையே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது

விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு

ஓடி ஒளியவில்லை. சென்னையில்தான் இருக்கின்றார். நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் மனுதாக்கல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

22 வருடங்களுக்கு பின் 'அமிதாப்' கனவை நனவாக்கிய குஷ்பு

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

அஜித்தின் 'விவேகம்' டீசர்: 11 மணி நேரத்தில் 22.5 லட்சம் பார்வையாளர்கள்

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி அஜித் ரசிகர்களின் விடாத முயற்சியால் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருகிறது