பதக்க வீராங்கனையின் கனவை நனவாக்கிய நடிகர் சல்லு பாய்! வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. இவர் பளு தூக்கும் பிரிவில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இதனால் மீராபாய் சானுவிற்கு பிரதமர் உட்பட ஒட்டுமொத்த இந்தியர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீராபாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் சல்மான்கான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த வீராங்கனை மீராபாய் சானு “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நீங்கள்… என்னுடைய கனவு நிறைவேறிட்டது போல இருக்கிறது… மிக்க நன்றி சார்“ என டிவிட் செய்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு தற்போது ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
Thank you so much @BeingSalmanKhan sir. I am a big fan of you and it was like a dream come true for me. https://t.co/CjGEA5fCEU
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com