சல்மான்கான் மான்கள் வேட்டையாடிய வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான்கான் உள்பட ஒருசில பாலிவுட் நட்சத்திரங்கள் அபூர்வமான கருப்புநிற மான்களை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்
பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பின் இடையே ஓய்வு நேரத்தில் அவர்கள் கங்கணி என்ற பகுதிக்கு சென்று வேட்டையாடியதாகவும், அதில் அபூர்வமான கருப்பு நிற மான்கள் இரண்டை சுட்டு தள்ளியதாகவும் புகார் எழுந்தது
இதனையடுத்து சல்மான்கான்மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழும், மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149–ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு 20 வருடங்களாக விசாரணை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து சல்மான்கான் உள்ளிட்ட அனைவரும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சற்றுமுன் வாசிக்கப்பட்ட தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சல்மான்கான் தண்டனை குறித்த விபரங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments