சல்மான்கான் மான்கள் வேட்டையாடிய வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான்கான் உள்பட ஒருசில பாலிவுட் நட்சத்திரங்கள் அபூர்வமான கருப்புநிற மான்களை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பின் இடையே ஓய்வு நேரத்தில் அவர்கள் கங்கணி என்ற பகுதிக்கு சென்று வேட்டையாடியதாகவும், அதில் அபூர்வமான கருப்பு நிற மான்கள் இரண்டை சுட்டு தள்ளியதாகவும் புகார் எழுந்தது

இதனையடுத்து சல்மான்கான்மீது  வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழும், மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149–ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு 20 வருடங்களாக விசாரணை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து சல்மான்கான் உள்ளிட்ட அனைவரும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சற்றுமுன் வாசிக்கப்பட்ட தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சல்மான்கான் தண்டனை குறித்த விபரங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

அஃப்ரிடியை ரவுண்டு கட்டி அடிக்கும் கபில்தேவ், சச்சின், கோஹ்லி காம்பீர், சுரேஷ்ரெய்னா

நமது நாட்டை நிர்வகிக்க திறமையான நபர்கள் உள்ளனர். நமது நிர்வாகம் குறித்து வெளி நபர்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை

காவிரி பிரச்சனைக்காக கைகோர்க்கும் ரஜினி-கமல்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட கட்சிகளும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்.

காமன்வெல்த் போட்டி: பதக்கப்பட்டியலை தொடங்கியது இந்தியா

ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்கோஸ்ட் நகரில் கண்ணைக்கவரும் வண்ண நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

ஒத்திவையுங்கள், மீறினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது: பாரதிராஜா எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தீவிர போராட்டம் நடந்து வருகின்றது.

செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல்

காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. மத்தியில் நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர்.