56 வயதில் பிரபல நடிகையின் பிகினி வொர்க் அவுட்… இணையத்தை அலறவிட்ட வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க நடிகை ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்காக பரிசு கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் அந்த நடிகையின் வயது குறித்தும் ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மெக்சிகோவில் பிறந்து அமெரிக்க நடிகையாக அறியப்படுபவர் சல்மா ஹாயக். இவர் ‘ஃபரிடா‘ திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். 6 அகாடமி விருதுகளை பெற்ற இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதுகளை வாங்கிக் குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிப்புத் திறமைக்காக கொண்டாடப்படும் நடிகை சல்மா ஹாயக் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்திருந்த ‘மேஜிக் மைக்கின் லாஸ்ட் டான்ஸ்’, ‘புஸ் இன் பூட்ஸ் தி லாஸ்ட்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் இவர் 56 வயதான பிறகும் பிகினி அணிந்து புகைப்படம் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் பிகினி உடைகளுக்காக அமெரிக்க ரசிகர்களிடையே பிரபலமாக இருந்துவரும் சல்மா ஹாயக் தன்னுடைய இன்ஸ்டா கணக்கில் 25 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதை வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார். அதாவது பிகினி உடைகளுக்காகவே பெயர்பெற்ற நடிகை சல்மா தனது ஃபாலோயர்களுக்கு பரிசு கொடுக்கும் வகையில் நீச்சல் குளத்திற்குள்ளே இருந்தவாறு வொர்க் அவுட் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என்னால் நம்ப முடியவில்லை. 25 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்வர்கள் என்று. மிக்க நன்றி. எனது பிகினி படங்களை நீங்கள் அனைவரும் மிகவும் விரும்புவதால் இதோ உங்களுக்காக ஒரு பிகினி வொர்க் அவுட். நான் உடற்பயிற்சி செய்வதை வெறுக்கிறேன். ஆனால் தண்ணீரில் நடனமாடும் நல்ல தருணங்களை கொண்டாட விரும்புகிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு தேசிய பிகினி தினத்தை முன்னிட்டு பல வண்ணங்களைக் கொண்ட பிகினி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது நீருக்குள்ளேயே இருந்தவாறு வாட்டர் ஏரோபிக்ஸ் செய்தும் கார்டியோ நடனம் ஆடியும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறது. மேலும் உங்களுக்கு 56 வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். 23 வயதாக இருக்கும் என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கணவன் மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் நடிகை சல்மா ஹாயக் தொடர்ந்து மெக்சிகன் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதோடு சமூக வலைத்தளப் பக்கத்திலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவரது பிகினி வொர்க் அவுட் வீடியோ 14 மில்லியன் லைக்ஸ்களை குவித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments