காதலுக்காக சமாதி ஆக்கப்பட்ட அனார்கலி? மனதை உருக்கும் ஓர் காதல் கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாஜகான்-மும்தாஜ் காதலை நாம் உச்சிக்கொட்டி புகழ்ந்து வருகிறோம். இந்த காதலுக்கு சற்றும் குறையாத ஒரு வரலாற்றுக் காதல் ஜோடிதான் சலீம்-அனார்கலி. இவர்களைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்து இருப்பதில்லை.
அக்பரின் ஆசை மகனான சலீம்(ஜஹாங்கீர்) தன்னுடைய அரண்மனையில் இருந்த அடிமைப்பெண் (அந்தப்புரத்துப் பெண்) ஒருவரை காதலித்து இருக்கிறார். இந்தக் காதலை விரும்பாத மொகலாய அரசர் அக்பர், அனார்கலியை (நாதிரா) உயிரோடு புதைத்துவிட்டதாக வரலாற்றுத் தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது காதலி அனார்கலிக்காக சலீம் ஒரு கல்லறையை எழுப்பினார் என்றும் அந்த கல்லறை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் பகுதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மொகலாயர் ஆட்சிக்குப் பெயர்போன அக்பர் ஏன் தன்னுடைய மகனின் காதலை மறுத்தார்? இந்தக் காதலுக்காக ஒரு பெண்ணை, அவர் உயிரோடு புதைத்தாரா? அல்லது இந்த காதலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருந்ததா?
இப்படி சலீம்-அனார்கலி காதலைச் சுற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கதைGlitz அனார்கலி-சலீம் காதல் கதையை ஆடியோ வடிவில் விளக்கி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments