லாக்டவுனால் அதிகரித்த பாலியல் உபகரணங்கள் விற்பனை: தமிழகத்தில் படுஜோர் என தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்பட சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நாட்களில் உலகம் முழுவதும் பாலியல் உபகரணங்கள் மிக அதிக அளவில் விற்பனையாகி உள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குறிப்பாக இந்தியாவில் 65 சதவீதம் பாலியல் உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இந்திய அளவில் தமிழகம் பாலியல் உபகரணங்கள் விற்பனையில் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. லாக்டவுன் ஆரம்பத்தில் காண்டம்கள் உள்பட கருத்தடை சாதனங்கள் மிக அதிக அளவில் மருந்து கடைகளில் விற்பனை ஆன நிலையில் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பலர் பாலியல் உபகரணங்களை வாங்கி குவித்து வருவதாக தெரிகிறது
செக்ஸ் பொம்மைகள் மற்றும் பாலியல் உபகரணங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வருவதாக கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம் ஒன்று எடுத்த கணக்கின்படி இந்தியாவில் 65% பாலியல் உபகரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் விற்பனை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நகரங்களைப் பொறுத்தவரை மும்பையில் மிக அதிகமாகவும், அதனை அடுத்து பெங்களூரு, டெல்லி, சூரத் ஆகிய நகரங்களில் மிக அதிகமாக பாலியல் உபகரணங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. இந்த பாலியல் உபகரணங்கள் பெரும்பாலும் சீனாவில் தயாராகி வருகிறது என்பதும் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் இருந்தும் ஆர்டர் குவிந்து வருவதால் இந்த நிறுவனங்கள் அதிகமான நபர்களை வேலைக்கு அமர்த்தி செக்ஸ் பொம்மைகள் உள்பட பாலியல் உபகரணங்கள் உற்பத்தியை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments