திருப்பூர் கேரம்போர்டை அடுத்து சேலத்தில் நடந்த ட்ரோன் காமெடி
- IndiaGlitz, [Friday,April 17 2020]
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சிலர் மதிக்காமல் வெளியில் சென்று விளையாடிக்கொண்டு இருப்பதை போலீசார் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட திருப்பூர் மாநகர போலீசார் மரத்தினடியில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த சிலரை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து அவர்களை விரட்டியடித்தனர் என்ற காமெடி வீடியோவை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது கேரம் போர்டை அடுத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ட்ரோன் மூலம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சேலம் பகுதியில் ஒரு மைதானத்தில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென ட்ரோன் வந்ததை பார்த்து அதிர்ந்த சிறுவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக தலைதெறிக்க ஓடினர்.
இருப்பினும் ட்ரோன் அந்த சிறுவர்களை விடாமல் துரத்தியது. சிறுவர்கள் தங்கள் முகம் ட்ரோன் கேமிராவில் தெரியாமல் இருக்க உடுத்தியிருந்த கைலி, செடிகொடிகள், இலைகள் ஆகியவற்றை மறைத்து பார்த்தும் ட்ரோன் அவர்களை விடவில்லை. இதனையடுத்து ஒருசில சிறுவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சேலம் போலீசார் இதுகுறித்த வீடியோவை தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பொருத்தமான வடிவேலு காமெடி வசனத்தை இணைத்து வெளியிட்டுள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து இனிமேலாவது வெளியில் சுற்றாமல் வீட்டில் இருக்க வேண்டும் என போலீசார்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதே காமெடி சேலம் மாநகரிலும் ?????? (நகர மலை அடிவாரத்தில்) pic.twitter.com/uyvkPR032o
— salemcitypolice (@Salemcitypolice) April 17, 2020