சேலம் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு! 4 தினங்களில் இருவருக்கு!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]


 

சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, ஒழுங்குமுறை பணியில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பே காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் தும்பல் அடுத்த கிருஷ்ணாபுரம் பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனால் சம்பந்தப் பட்ட அந்த பள்ளி மூடப்பட்டது. மேலும் மாணவியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த அனைவரையும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. இவர் கடந்த 19 ஆம் தேதி முதன் முதலாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருக்கிறார். தற்போது அந்த ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.