பேமிலி மேன்-2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் இவ்வளவா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்...!
- IndiaGlitz, [Saturday,June 12 2021]
தி பேமிலி மேன்-2 என்ற வெப்சீரியஸ், தமிழ் இனத்திற்கு எதிரான பல கருத்துக்களை கூறியிருப்பதால், தமிழ்மக்கள் பலரும் தங்களது எதிர்ப்பை சமூகவலைத்தளங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் தொண்டு ஆர்வலர்கள், சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு, போராடி வருகிறார்கள்.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த வெப்-தொடரில் நடித்துள்ளனர். இந்த தி பேமிலி மேன்-2 வெப்சீரிஸ் ஆனது, 2 சீசன்களாகவும், சுமார் 19 எபிசோட்களாகவும் வெளிவந்துள்ளது.
நடிகர்களின் சம்பளம் :
நாயகனாக நடித்த மனோஜ் பாஜ்பாய்-க்கு - ரூ 10 கோடி
மேஜர் சமீராக தோன்றிய தர்ஷன் குமார் என்பவருக்கு - ரூ 1 கோடி
த்ரிதியாக தோன்றிய அஸ்லேஷா தாகூர்-க்கு - ரூ.50 லட்சம்
அரவிந்த் ஆக நடித்த ஷரத் கேல்கர்-க்கு - ரூ 1.6 கோடி
மிலிந்த் ஆக நடித்த சன்னி இந்துஜா-விற்கு -ரூ.60 லட்சம்
ஜே.கே -வாக தோன்றிய ஷரிப் ஹாஷ்மி-க்கு -ரூ .65 லட்சம்
சுசியாக நடித்த பிரியாமணிக்கு - ரூ.80 லட்சம்
ராஜலக்ஷ்மியாக நடித்த சமந்தாவிற்கு - ரூ.3 முதல் 4 கோடியும் தரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் வெறும் 9 எபிசோட்கள் மட்டுமே நடிக்க சமந்தாவிற்கு 10 கோடி சம்பளம் வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
வெப்சீரிஸ்- களில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளங்கள் லட்சங்களிலும், கோடிகளிலும் குவிக்கப்படுவதால்,பல நட்சத்திரங்களும் இதுபோன்ற இணையத்தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக சமந்தா திரைப்படங்களில் நடிப்பதற்கு ரூ.1.5 கோடி முதல் 2 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது சம்பளம் கோடிகளில் வந்து குவிவதால், வரலாறு பின்புலம் தெரியாமல் நடித்துவிட்டு, தமிழ் ரசிகர்கள் மற்றும் மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
தற்சமயம் வரை இந்த வெப்-தொடருக்கும், அதை வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என பலரும் போராடி வருகிறார்கள். மக்கள் பலரும் ஊடகங்கள் மற்றும் டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.