பேட்டி தர பணம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர்களுக்கு செலவினை குறைக்கும் வகையில் முடிவெடுக்க இன்று நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாசர், விஷால், அரவிந்தசாமி, சிம்பு, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் நடிகர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஒரு திரைப்படம் கொடுக்கும் வசூலை பொருத்து அந்த படத்தில் நடிக்கும் நடிகரின் சம்பளம் நிர்ணயம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் நடிகர்களின் சம்பள நிர்ணயம் குறித்து விரைவில் தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் நடிகர், நடிகைகளிடம் பேட்டி எடுத்து அதை ஒளிபரப்பும் சாட்டிலைட் சேனல்கள் அந்த பேட்டியின் இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றது. எனவே இனிமேல் பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பளம் தர வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் இன்றைய கூட்டம் பல முக்கிய முடிவுகளுடன் சுமூகமாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments