ரூ.200 கோடியை நெருங்கிய 'சலார்' படத்தின் முதல் நாள் வசூல்.. திரையுலகினர் ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ’கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு உலக புகழ் பெற்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் மற்றும் மாஸ் நடிகர் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்த படம் என்பதால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் நேற்று இந்த படம் வெளியாகி முதல் காட்சி முடிந்தவுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பதும் ’கேஜிஎப்’ படத்தின் இரண்டு பாகங்களில் உள்ள வலுவான திரைக்கதை இந்த இடத்தில் இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும் பிரபாஸ் ரசிகர்கள் முதல் நாளில் இந்த படத்தை கொண்டாடி வந்தனர் என்பதும் இந்த படம் குறித்த பாசிட்டிவான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘சலார்’ திரைப்படம் முதல் நாளில் 178.7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது., முதல் நாளே கிட்டத்தட்ட ரூ.200 கோடியை இந்த படத்தின் வசூல் நெருங்கி உள்ளதை அடுத்து, அடுத்தடுத்த நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
The most violent man announced his arrival ⚠️#SalaarCeaseFire hits 𝟏𝟕𝟖.𝟕 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) on the opening day!
— Salaar (@SalaarTheSaga) December 23, 2023
𝐓𝐡𝐞 𝐛𝐢𝐠𝐠𝐞𝐬𝐭 𝐨𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚𝐧𝐲 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐅𝐢𝐥𝐦 𝐢𝐧 𝟐𝟎𝟐𝟑 💥#BlockbusterSalaar #RecordBreakingSalaar… pic.twitter.com/dJokmsdXMq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments