இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருது

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகிய தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய கே.விஸ்வநாத், சங்கராபரணம், சாகர சங்கமம் (தமிழில் சலங்கை ஒலி என்று டப் செய்யப்பட்டது) , சுவாதி முத்யம் (தமிழில் சிப்பிக்குள் முத்து) உள்பட பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளர். மேலும் 'குருதிப்புனல்', காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி', 'ராஜபாட்டை', 'உத்தமவில்லன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அரசின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வரும் மே 3ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த உயரிய விருதை சத்யஜித்ரே, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், உள்பட பலர் பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே.விஸ்வநாத் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.