இவங்க எல்லாம் 'சலார்' படத்தை பார்க்க முடியாது: ஷாக்கிங் சென்சார் சான்றிதழ்..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே ‘சலார்’ திரைப்படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ ’லியோ’ ’ஜவான்’ ஆகிய திரைப்படங்கள் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ரன்னிங் டைமாக இருந்த நிலையில் ‘சலார்’ திரைப்படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ திரைப்படம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்று இருந்தபோதிலும் அந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.