அஜித், கார்த்தி படங்களுடன் கனெக்சன் ஆன 'Mr.லோக்கல்'

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் தற்போது தொடங்கிவிட்டது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மிகப்பெரிய தொகை ஒன்றை கொடுத்து பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் தமிழக உரிமையையும், அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் திருச்சி-தஞ்சை ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள 'Mr.லோக்கல்' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஒருபக்கம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல் வெளியீடு போன்ற புரமோஷன்கள் தேதிகளும் திட்டமிடப்பட்டு வருகின்றன.