அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.. இரட்டை அர்த்தம் பாடல் என்ற விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவான "ஜாலியோ ஜிம்கானா" என்ற திரைப்படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில், இந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நடிகை ஆண்ட்ரியா பாடிய இந்த பாடலை சக்தி சிதம்பரம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் முழுவதும் இரட்டை அர்த்தங்களைக் கொண்ட வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, "போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்திய வச்சு அடிப்பான், டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால் குத்துவான்" போன்ற வரிகள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன.
இது குறித்து இயக்குநர் சக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். "பாடல் நல்ல ஹிட், ஒரு மில்லியன் டச் செய்வது நிச்சயம். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறார்கள். ஒரு பெண், தனக்கு வரப் போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது தான் இந்த பாடல். இதில் டபுள் மீனிங் இருக்கிறது என்று சொல்வதைக் குறித்து நான் கவலைப்படவில்லை; பாடல் ஹிட் அவ்வளவுதான்," என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், "பாடல் நன்றாக இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது" என்றும் கூறியுள்ளார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ‘ஜாலியோ ஜிம்கானா" திரைப்படத்தில் அபிராமி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments