நயன்தாரா படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகம்.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தில் பெண் இசையமைப்பாளர் அறிமுகமாக இருப்பதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்க இருக்கும் திரைப்படம் ’தி டெஸ்ட்’. கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சாக்சிஸ்ரீ கோபாலன் என்பவர் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே பெண் இசையமைப்பாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் என்ற வாய்ப்பை பெற்றுள்ள சாக்சிஸ்ரீ கோபாலன், ’தி டெஸ்ட்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல இடத்தை பெறுவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

த்ரிஷா பிறந்த நாளில் வெளியான 'தி ரோடு' மேக்கிங் வீடியோ.. மாஸ் காட்சிகள்..!

இன்று த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'தி ரோடு' என்ற படத்தின் மேக்கிங் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது

முன்கூட்டியே தொடங்கப்படுகிறதா பிக்பாஸ் தமிழ் சீசன் 7? கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா?

பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் தேதி.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த மாஸ் அறிவிப்பு வெளியாகி

'லால் சலாம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே நடைபெற்றது