close
Choose your channels

தூங்கும் தோனியிடம் ரொமான்ஸ் செய்யும் சாக்சி!

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனி தற்போது தனது மனைவி குழந்தையுடன் ஊரடங்கு விடுமுறையை கழித்து வருகிறார்.

இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தோனி படுக்கையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவருடைய கால்களை கடிப்பது போன்ற ஒரு போஸ் கொடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ’நீங்கள் கவனத்தை ஈர்க்கும் நேரம் இதுதான்’ என்றும் சாக்சி குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடுமுறையில் தல தோனி முழுவதுமாக ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் பெரும்பாலும் அவர் படுக்கையில் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. தல தோனி மீண்டும் களத்தில் இறங்கி தனது அதிரடி ஷாட்டுக்களை அடிக்கும் காட்சிக்காக அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் அவர் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

View this post on Instagram

Times when you crave attention from #mrsweetie !

A post shared by sakshi singh dhoni (@sakshiisingh_r) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment