தல தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட்… செம குஷியில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நட்சத்திர தம்பதிகளான எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி ஆகிய இருவரும் தங்களது 11 ஆவது திருமணநாளை கடந்த ஜுலை 4 ஆம் தேதி கொண்டாடி உள்ளனர். இந்த திருமண நாளையொட்டி தல தோனி, தனது காதல் மனைவி சாக்ஷிக்கு அழகான விண்டேஜ் கார் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்தக் காரின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியைப் பொறுத்த வரைக்கும் தல தோனியின் பங்கு அளப்பரியது. மேலும் கேப்டன்ஷிக்கு பெயர்ப்போன இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகத் தொடர்ந்து கலக்கி வருகிறார். நட்சத்திர வீரராக வலம்வந்த தோனி கடந்த 2010 ஜுலை 4 ஆம் தேதி டேஹ்ராடூனில் திடீரென சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். மேலும் சாக்ஷியை தான் ஏற்கனவே காதலித்து வந்தததையும் அவர் அப்போதுதான் வெளியுலகிற்கு தெரிவித்தார்.
இந்நிலையில் 11 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் இணைப்பிரியா ஜோடிகளாக இருந்து வரும் தோனி-சாக்ஷி தம்பதிகள் தங்களது 11 ஆவது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள், சக வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்தத் திருமணத் தினத்தை முன்னிட்டு தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.
இதனால் வெளிர் நீல நிறம் கொண்ட விண்டேஜ் கார் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்தக் காதல் தம்பதிகளுக்கு ஷிவா எனும் 2 வயது பெண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments