தோனியுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்… பகீர் கருத்தை வெளியிட்ட சாக்ஷி… என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தெரிவித்த கருத்து ஒன்று தற்போது ரசிகர்களிடையே வைரலாகப் பரவி வருகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களின் மனைவிகளிடம் நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. அப்படியொரு நேர்காணலின் போது தோனியின் மனைவி சாக்ஷி, பிரபல விளையாட்டு வீரரின் மனைவியாக இருப்பதற்கு பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்கான தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் இல்லாமல் போகிறது என நொந்துகொண்டுள்ளார்.
மேலும் அவலுவலகத்திற்கு செல்பவர்களைத் திருமணம் செய்தாலே நிறைய விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவே விளையாட்டு வீரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தனிப்பட்ட சுதந்திரத்தை மறந்துவிட வேண்டும். கேமரா முன்னர் எப்படி இருக்கிறோமோ அதே போன்றே நிஜ வாழ்க்கையில் இருக்க மாட்டோம். குறிப்பாக பொதுவெளியில் நம்மைப் பற்றிய தவறான கருத்துகள் பரவுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்களுடன் வெளியே செல்வதாக இருந்தாலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் நம்மை பழக்கப்படுத்திக் கொண்ட பின்னரே சகஜமாக வாழ முடிகிறது. ஆனால் இத்தனை விஷயங்களையும் தாண்டி எனது கணவரால் நான் பெருமை கொள்கிறேன் என்றும் சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னர் தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். ஏற்கனவே 4 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சிஎஸ்கே இவரது தலைமையில் இந்த ஆண்டு 5 ஆவது முறையும் சாம்பியன் பட்டம் வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். காரணம் 40 வயதைக் கடந்த தோனி இந்த ஆண்டு தனது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com