நம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. நேற்று களமிறக்கப்பட்ட இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் தனது ஸ்பார்க்கை வெளிப்படுத்தி அபாரமாக அரைசதம் அடித்து இறுதிவரை வெற்றிப்பாதைக்கு அணியை கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலும் நேற்று நடந்த இன்னொரு போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளும் சிஎஸ்கே அணிக்கு சம்பிரதாய போட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மனமுடைந்து காணப்படுகின்றனர்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்சி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இது ஒரு விளையாட்டு. நீங்கள் சிலவற்றை வெற்றி பெற்றால் சிலவற்றை இழக்கிறீர்கள். பல வருடங்கள் பல கவர்ச்சிகரமான வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் சாட்சியாக இருக்கின்றன! ஒன்றைக் கொண்டாடுவதும் மற்றொன்றால் மனம் உடைந்து போவதும்.

சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வி அடைகிறார். மற்றவர்கள் தவற விடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு! விளையாட்டுத்திறனின் சாரத்தை வெல்லாமல் உணர்ச்சிகளை அனுமதிக்கவும். இது ஒரு விளையாட்டு! யாரும் தோல்வியை விரும்பவில்லை, ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது! தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்’ என்று பதிவு செய்துள்ளார். சாக்சியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

View this post on Instagram

??

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on Oct 25, 2020 at 10:12am PDT