எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள்: சாக்ஷி தோனியின் உருக்கமான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனி அவர்கள் நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதும் அவரது முடிவால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்பதும் தெரிந்ததே
தோனியின் ஓய்வு முடிவு குறித்து பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகளும் ஓய்வுக்குப் பின் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் ஓய்வு முடிவு குறித்து உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீங்கள் சாதித்த சாதனை குறித்து பெருமைப்பட வேண்டும்: கிரிக்கெட் விளையாட்டுக்கு நீங்கள் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். எனது வாழ்த்துக்கள். நீங்கள் சாதனைக்குரிய நபராக இருப்பது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த விளையாட்டை நீங்கள் எவ்வளவு தீவிரமாக விரும்பினீர்கள் என்பதும் இந்த விளையாட்டில் இருந்து நீங்கள் விடைபெறும் போது எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்த இருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன். உங்களுடைய ஆரோக்கியம் மகிழ்ச்சியை நான் மிகவும் விரும்புகிறேன். இனி பல அற்புதமான விஷயங்கள் உங்கள் கண்முன் உள்ளது என்று சாக்ஷி தோனி கூறியுள்ளார்
மேலும் ’நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததையும் மக்கள் மறந்து விடுவார்கள் ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்’ என்ற மாயா ஏஞ்சலோவின் வார்த்தைகளையும் சாக்ஷி தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments