தமிழில் பதிலளித்த சாக்சி: குதூகலத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கேள்வி எழுந்த நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் தல தோனியின் ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்காத நிலையில் தற்போது மீண்டும் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஐபிஎல் போட்டி உறுதியானதை அடுத்து சிஎஸ்கே அணியின் ஜெர்ஸி கலரான மஞ்சள் நிற உடையை தோனியின் மனைவி சாக்ஷி அணிந்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். சிஎஸ்கேவின் உடையான மஞ்சள் நிற உடையுடன் கூடிய இந்த புகைப்படத்திற்கு சிஎஸ்கே அணியின் டுவிட்டர் அட்மின் ’வா வா மஞ்சள் மலரே’ என்ற பாடல் வரியை கமெண்ட்டாக பதிவு செய்திருந்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ராஜாதி ராஜா’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் முதல் வரி தான் இந்த ’வா வா மஞ்சள் மலரே’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழில் பதில் அளித்த சாக்சி, ‘டிக்கெட் ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே’ என்று அந்த பாடலின் இரண்டாவது வரியை சற்று மாற்றி தமிழில் பதிவு செய்து, தோனியுடன் தான் ஐக்கிய அரபு எமிரேட் செல்ல டிக்கெட்டை கேட்டது சுவாரஸ்யமான ஒன்றாக கருதப்படுகிறது. சிஎஸ்கே அட்மினின் ரஜினி படப் பாடலின் வரி மற்றும் அதற்கு தமிழில் பதிலளித்த சாக்சியின் பதிவும் சிஎஸ்கே ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments