டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட 'ராமாயணம்' இயக்குனரின் வாரிசு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 1980களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இராமாயணம் தொடரை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர் ராமான்ந்த் சாகர். பத்மஸ்ரீ விருது பெற்ற இவருடைய இராமாயணம் தொடர் டிவியில் தோன்றும்போது பொதுமக்கள் டிவிக்கு கற்பூரம் காட்டிய நிகழ்ச்சியெல்லாம் நடந்ததுண்டு. அந்த வகையில் பக்தி மணம் கமழும் வகையில் தொடரை வெற்றிகரமாக இயக்கியவர்.
இந்த நிலையில் ராமான்ந்த் சாகரின் கொள்ளுப்பேத்தியும் மாடல் அழகி மற்றும் பாடகியுமான சாக்ஷி சோப்ரா என்பவர் தனது டாப்லெஸ் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே அரைகுறை ஆடையுடன் கூடிய தன்னுடைய படங்களை பதிவு செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாப்லெஸ் புகைப்படத்தை பதிவு செய்ததோடு அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: மனித உடல் ஒரு அழகான பொருள். ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும். என்னை நீங்கள் எந்தவிதத்தில் இகழ்ச்சியான பெயர் சொல்லி கூப்பிட்டாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு சந்தோஷம் தரக்கூடியதை நான் செய்வேன். நான் இதில் எந்த வகையில் வெட்கப்படவில்லை. நீங்களும் வெட்கப்படாமல் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை வெளிப்படுத்துங்கள்' என்று கூறியுள்ளார்.
'இராமாயணம்' தொடரை இயக்கிய பெருமைக்குரிய குடும்பத்தின் வாரீசாக இருந்து கொண்டு டாப்லெஸ் புகைப்படம் உள்பட ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷிக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com