close
Choose your channels

பிகினி அணிந்து ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் சாக்சி அகர்வால்.. அப்படி என்ன விசேஷம்?

Saturday, July 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் சாக்சி அகர்வால் தனது சமூக வலைதளத்தில் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து நன்றி சொல்லும் போது கூட பிகினி உடை தானா? என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்சி அகர்வால் 49 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடினார். மேலும் அவர் அட்லி இயக்கத்தில் உருவான ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் ரஜினியின் ’காலா’ அஜித்தின் ’விஸ்வாசம்’ ஆர்யாவின் ’டெடி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சாக்சி அகர்வால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களையும் குறிப்பாக நீச்சல் உடை வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில் இன்று சாக்சி அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய நாளில் நான் கடவுளிடம் வேண்டுவது என்னவென்றால் அனைவரும் உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான். என்னுடைய இன்னொரு இனிமையான பிறந்தநாளில் இந்த பீச்சில் கொண்டாடுவதால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பதிவுக்கு பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment