close
Choose your channels

ஓப்பன் நாமினேஷனில் ரியோ செய்தது தப்பு: சாக்சி அகர்வாலின் வீடியோ!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் புதுமையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்கள் இருவரை நாமினேட் செய்து அதற்கான காரணத்தையும் கூறினர்.

ஆனால் ரியோ மட்டும் அனிதா குறித்த ஒரு கருத்தை தெரிவித்து விட்டு அதன்பின் அவரை நாமினேட் செய்யாமல் வேறு இருவரை நாமினேஷன் செய்தார். நாமினேஷனின் போது ஒரு கருத்தை தெரிவித்தால் அது எடிட் செய்யப்படாமல் அப்படியே மக்களிடம் போய் சேரும் என்றும் அவர் கருதியதால்தான் இவ்வாறு நாமினேசன் படலத்தின் போது அனிதா குறித்து அவர் கூறியதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களின் ஒருவரான சாக்ஷி அகர்வால் இது குறித்து தனது கருத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முதல் முதலாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது. நாமினேட் பண்ணுவதற்கான காரணங்களை ஓப்பன் ஆக சொல்வது என்பதே ஒரு பெரிய டாஸ்க் தான். நாமினேட் பண்றதுக்கு ரீசன் சொல்லலாம், ஆனால் பண்ணாமல் இருப்பதற்கு எதற்காக ரீசன் சொல்ல வேண்டும். ரியோ அனிதா குறித்து பேசினார், ஆனால் நாமினேட் செய்யவில்லை. தனியாக பேசி கிளியர் பண்ண வேண்டிய விஷயத்தை நாமினேஷனில் கூறியதால் ஒரு பிரச்சனையாகிவிட்டது.

ஓப்பன் நாமினேஷன் என்பது ஒரு நல்ல விஷயம். நாம பண்ற தப்பு நமக்கே தெரிந்துவிடும். அதை கரெக்ட் பண்ணி விட்டு பாசிட்டிவ் கேம் விளையாடினால் ஃபைனல் வரைக்கும் போகலாம்’ என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார். ஓப்பன் நாமினேஷனில் ரியோவின் தவறை சுட்டிக்காட்டிய சாக்ஷி அகர்வாலின் இந்த வீடியோவுக்கும் பிக்பாஸ் ரசிகர்களும் நெட்டிசன்களும் பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment