மொட்டை மாடியில் மழையில் நனைந்து குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,November 25 2020]

ஒரு பக்கம் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் என்னென்ன சேதங்களை உண்டாக்குமோ என தமிழக அரசும், தமிழக மக்களும் பதட்டத்தில் உள்ளனர்.

இன்னொருபக்கம் எதையும் காமெடியாக பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இந்த நிவர் புயலையும் விட்டு வைக்காமல் புயல் குறித்த மீம்ஸ்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் இந்த கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் நடிகைகளும் தங்கள் வழக்கமான பதிவுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சாக்சி அகர்வால் மொட்டை மாடியில் நின்று கொண்டு மழையில் நனைந்தபடி கவர்ச்சியான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜெயம் ரவி நடித்த ’மழை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’நீ வரும்போது...’ என்ற பாடலுக்கு அவர் குத்தாட்டம் ஆடுகிறார். மேலும் இதுமாதிரி மழையில் நனைந்து ஆட்டம் போடுவது என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்துகிறது என்று கூறியுள்ள சாக்சி அகர்வால் இன்றும் நாளையும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

More News

பலத்த சூரைக்காற்றால் விழுந்த மரம்: பிரபல இயக்குனரின் கார் சேதம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதியில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது 

சோமுவுடன் சேர்ந்து பிக்பாஸ் விதிகளை மீறிய அர்ச்சனா: வீடியோ ஆதாரம்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ஒரு குரூப் இயங்கி வருகிறது என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது 

நிஷாவுடன் ரமேஷை கோர்த்துவிடும் ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வெளியே தெரியாமல் இருந்த குரூப்பிஸம் இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் பாலாஜி வெளிப்படையாக

ரியோ-சனம் குரூப்பிஸ சண்டை: விழுந்து விழுந்து சிரித்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாக போட்டியாளர்களிடையே சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக ஆரி-பாலாஜி, ஆரி-சம்யுக்தா, பாலாஜி-அர்ச்சனா,

2015 ஐ நினைவுப்படுத்துமா செம்பரபாக்கம்? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களும் தற்போது நிவர் புயலின் காரணமாக விரைந்து நிரம்பி வருகிறது.