பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் அடுத்து செய்தது என்ன தெரியுமா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Friday,July 29 2022]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாக்ஷி அகர்வால் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் செய்த மற்றொரு பதிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கருப்பு டூ பீஸ் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்தால் இந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் இதே போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் பின்னணியாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பாடலையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பிகினி போட்டோஷூட் புகைப்படங்களை விட வீடியோவில் சாக்ஷி கிளாமராக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.