தனியா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா? நெட்டிசன்களை அலறவிடும் பிக்பாஸ் நடிகை புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்குமுன்பு “காலா“, “ராஜா ராணி“ போன்ற ஒருசில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடிகை சாக்ஷி வலம் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் வொர்க் அவுட், பிட்னஸ் புகைப்படங்களோடு கூடவே அதிரிபுதிரி கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் இவரது வரவை பாசிட்வ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளோடு கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை சாக்ஷி தற்போது புடவை அணிந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். ஆனால் அந்தப் புகைப்படம் முதுகுப் புறத்தைக் காட்டி சற்று கவர்ச்சியாக இருக்கும் நிலையில் அதன் கேப்ஷனாக “தனியாக இருப்பதிலும் எவ்வளவு ஒரு அமைதி இருக்கிறது“ எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் “உங்க மைண்ட் புரிஞ்சி போச்சி சாக்ஷி, “தனியா இருந்தாலும் இப்படியா?” எனக் கிண்டலடித்து அதை வைரலாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான “டெடி“ திரைப்படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்து இருந்தார். அதோடு ராய்லட்சுமி நடிக்கும் “சிண்ட்ரெல்லா“ திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் “அரண்மனை 3“ மற்றும் “தி நைட்“ போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments