சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

சிம்பு தற்போது ஆங்கிலப்படம் மற்றும் மணிரத்னம் படம் ஆகியவற்றில் நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் முதன்முதலாக இசையமைத்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இதை உறுதி செய்யும் வகையில் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார். விடிவி புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது.

கமல் என்னிடம் ரகசியத்தை கூற மறுக்கின்றார். சிவாஜி விழாவில் ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தன்னிடம் ரகசியத்தை கூற மறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்தியன்' படத்தின் 2ஆம் பாகத்தின் டைட்டில்: கமல் கூறிய ஆலோசனை

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் மீண்டும் இணைந்து 'இந்தியன் 2' திரைப்படத்தில் பணிபுரிவது உறுதியாகிவிட்டது என்பதையும் இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிக்பாஸ் தமிழ் வெற்றியாளர் இவர்தான்

கடந்த 100 நாட்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ் தமிழ் நேற்று முடிவுக்கு வந்தது. உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முறைப்படி வெற்றியாளரை அறிவித்தார்