'சக்க போடு போடு ராஜா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Saturday,December 16 2017]

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாவதால் அவருடைய ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'UA' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் 15 வினாடிகள், அதாவது 143 நிமிடங்கள் 15 வினாடிகள் ஓடும் வகையில் அமைந்துள்ளது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சேதுராமன் இயக்கியுள்ளார்.

More News

4 வயது சிறுமிக்காக பென்சில் நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சி

பொதுவாக இடதுகை பழக்கம் உள்ளவர்களால் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் போல் எளிமையாக அனைத்து செயல்களையும் செய்ய முடியாது.

மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்-முருகதாஸ் படக்குழு?

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'கலப்பை' என்ற ஒரு வதந்தி பரவி வந்தன

நான்கு பேர்களை மட்டும் ஃபாலோ செய்யும் யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் பிசியான காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. குறிப்பாக விஜய்யின் 'மெர்சல்' படத்தில் நடித்ததை அடுத்து 'விஜய் 62' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்தார் ஜெ. பிரதாப் ரெட்டி 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதால்

ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து: நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது