சூர்யாவுக்கு ஜோடியாகும் டீச்சர் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் படம் ஒன்றை பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சூர்யா-செல்வராகவன் முதன்முதலாக இணையும் இந்த படத்தின் நாயகி தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சாய்பல்லவி இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மலர் டீச்சர் கேரக்டரில் பிரேமம் படத்தில் நடித்த சாய்பல்லவி, அந்த ஒரே கேரக்டரால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் என்பது தெரிந்ததே

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதே தீபாவளி தினத்தில் தான் 'அஜித் 58' மற்றும் 'விஜய் 62' படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் தீபாவளி விஜய், அஜித், சூர்யா ரசிகர்களுக்கான தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிவேல் நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்: இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்

மதுரை அன்பு மீதான வழக்கு அவ்வளவுதானா?

பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செல்வனை

ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை சில மணி நேரங்களுக்கு முன்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட விவகாரம்

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி விவாகரத்து மனுதாக்கல்

சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரை விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்த சென்னை 2 சிங்கப்பூர் இயக்குனர்

இளைஞர்களின் புதிய முயற்சியில் கடந்த வாரம் வெளியான 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் முதல் பாதி நல்ல விமர்சனத்தையும் இரண்டாம் பாதி கலவையான விமர்சனங்களையும் பெற்றது