'பொம்பள தலை' என பிரபல நடிகையை குறிப்பிட்ட ரோபோ சங்கர்

  • IndiaGlitz, [Tuesday,December 18 2018]

லேடி சூப்பர் ஸ்டார் என நடிகை நயன்தாராவை கோலிவுட் திரையுலகமே அழைத்து வருவது போல் பிரபல நடிகை ஒருவருக்கு நடிகர் ரோபோ சங்கர் 'பொம்பள தல' என்று பட்டத்தை வழங்கியுள்ளார்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் பேசியபோது, 'நடிப்பில் சாய்பல்லவி ஒரு பொம்பள தல' என்று குறிப்பிட்டார். இதனை கேட்டவுடன் மேடையில் இருந்த தனுஷ், சாய்பல்லவி உள்பட அனைவரும் சிரித்தனர்.

'இந்த படத்தில் சாய்பல்லவி, ஆட்டோ டிரைவர் வேடத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளதாகவும், இந்த படம் முதல் பாகத்தைவிட சூப்பர் ஹிட்டாகும் ஆகும் என்றும், 'மாரி 3' உருவாகவும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரோபோ சங்கர் பேசினார். மேலும் 'மாரி 2' படத்தில் தனக்கு நல்ல வாய்ப்பை வழங்கிய தனுஷூக்கு தனது நன்றிகள் என்றும் ரோபோ சங்கர் தெரிவித்து கொண்டார்.