நான் தனியாள் இல்லை, எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி: சாய்பல்லவி வீடியோ

  • IndiaGlitz, [Sunday,June 19 2022]

சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கூறிய மதம் சம்பந்தப்பட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கமளித்து நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்ப்டுத்திஅ நிலையில் விளக்கம் அளிப்பதற்காக உங்கள் அனைவரையும் முதன் முதலாகச் சந்திக்கிறேன்.

நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அண்மையில் பேட்டி ஒன்றில் நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? இடதுசாரி ஆதரவாளரா? என்ற கேள்வி என்னிடம் எழுப்பப்பட்ட போது நான் நடுநிலையாளர் என்று கூறினேன். மனிதநேயம் மிக்கவர்களாக நாம் முதலில் இருக்க வேண்டும் என்றும் அதன் பிறகுதான் நமது அடையாளங்கள் என்றும் கூறினேன்.

சமீபத்தில் நான் 'தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குனரை சந்திக்க நேர்ந்தபோது ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து எனது ஆழ்ந்த வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அதே நேரத்தில் கோவிட் நேரத்தில் பசுக்களை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர் ஒருவர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டதும் என் மனதை மிகவும் பாதித்தது.

என் சிறுவயதில் நாம் பள்ளியில் இருக்கும் போது எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், இந்தியர் அனைவரும் சகோதர சகோதரிகள் என உறுதிமொழி ஏற்றது என் மனதில் இன்னும் ஆழமாக உள்ளது. எனவே நான் எப்போதும் நடுநிலையாளராக இருப்பதையே விரும்புகிறேன்.

எந்த மத மதத்தில் வன்முறை நடந்தாலும் அது தவறு என்று என்பதே நான் அளித்த அந்தப் பேட்டியின் சாராம்சம். ஆனால் எனது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டதால் இந்த சர்ச்சை எழுந்தது என்பது தான் உண்மை. அரசியல் பிரபலங்கள் கூட எனது பேட்டியை முழுமையாக பார்க்காமல் தங்கள் கருத்தை கூறியது வேதனைக்குரியது.

மேலும் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி. அதுமட்டுமின்றி நான் தனியாள் இல்லை என்பதையும் எனக்கு உணர்த்தியது என்று கூறினார்.