ஒரே நேரத்தில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இளம் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
'பிரேமம்' படம் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின் வெற்றியால் தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார். இவர் நடித்த முதல் தமிழ்ப்படமான 'கரு' திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சூர்யாவுடன் 'NGK' படத்திலும், தனுஷுண்ட 'மாரி 2' படத்திலும் நடித்து வருகிறார்
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் சாய்பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கிய சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன்பின்னர் ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் புதிய சயன்ஸ் பிக்சன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார். இந்த படம் முடிந்த பின்னர் தான் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் தான் சாய்பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout