ஐதராபாத் போலீசை பாராட்டிய பிரபல விளையாட்டு வீராங்கனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர்களும் இன்று அதிகாலை என்கவுண்டரில் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
இந்த என்கவுண்டருக்கு தெலுங்கானா மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல சாலைகளில் பட்டாசு வெடித்து இந்த என்கவுண்டர் மரணங்களை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளும் போலீசார்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த என்கவுண்டருக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் மட்டும் சட்டத்தின்படியே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற கருத்தை கூறி வருகின்றனர்
இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஹைதராபாத் போலீசாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது ’சிறப்பான வேலை செய்த ஹைதராபாத் போலீசுக்கு எனது சல்யூட்’ என்று ட்விட் செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
Great work #hyderabadpolice ..we salute u ??
— Saina Nehwal (@NSaina) December 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments