சித்தார்த் மன்னிப்புக்கு சாய்னா நேவால் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டுவிட்டுக்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய டுவிட்டுக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அந்த மன்னிப்புக்கு பதிலளித்த சாய்னா நேவல் கூறியது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் பதிவு செய்து வீட்டிற்கு சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் தனது கருத்தை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சித்தார்த்திற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்ததை அடுத்து இன்று அவர் சாய்னா நேவலுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி தனது டுவிட்டரில் பதிவு செய்தார். தனது நகைச்சுவை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் இருப்பினும் தான் பயன்படுத்திய வார்த்தைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் எனது மன்னிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான் என்றும் சித்தார்த் தெரிவித்திருந்தார்.
சித்தார்த்தின் இந்த மன்னிப்பு குறித்து கருத்து தெரிவித்த சாய்னா நேவால், ‘நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், உங்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய டுவிட்டிற்கு சித்தார்த் மன்னிப்பு கேட்டதும் அந்த மன்னிப்பை சாய்னா ஏற்றுக்கொண்டதையும் அடுத்து இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dear @NSaina pic.twitter.com/plkqxVKVxY
— Siddharth (@Actor_Siddharth) January 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com