சித்தார்த்தின் சர்ச்சை டுவிட்டிற்கு சாய்னா நேவால் கணவரின் நாகரீகமான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்தல் சித்தார்த்திற்கு சாய்னா நேவால் கணவர் நாகரீகமாக பதில் அளித்துள்ளார்.
பிரபல பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் பிரதமரின் பஞ்சாப் பயணம் குறித்தும் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் தனது ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார் இந்த ட்விட்டிற்கு பாஜக பிரமுகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சாய்னா நேவால் கணவர் பருபள்ளி கஷ்யப் இதுகுறித்து தனது கருத்தை நாகரீகமாக சித்தார்த்துக்கு தெரிவித்துள்ளார். உங்களுடைய கருத்து என்னை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. உங்களுடைய கருத்தை தாராளமாக சொல்லலாம், ஆனால் அதே நேரத்தில் தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இவ்வாறு சொல்வது சரியானது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார். சாய்னா நேவல் கணவரின் இந்த நாகரீகமான பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
This is upsetting for us … express ur opinion but choose better words man . I guess u thought it was cool to say it this way . #notcool #disgraceful @Actor_Siddharth
— Parupalli Kashyap (@parupallik) January 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com