காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டன் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 தங்கம் உள்பட இந்தியாவிற்கு மொத்தம் 17 பதக்கங்கள் கிடைத்தது.
இந்த நிலையில் இந்தியாவின் பேட்மிண்டன் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவல் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இன்று நடைபெற்ற பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாய்னா நேவல் தங்கப்பதக்கமும், அவரை எதிர்த்து விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளியும் பெற்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் மொத்த பதக்கப்பட்டியல் 63ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 தங்கம், 17 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் ஆகியவை அடங்கும். பேட்மிண்டன் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments